தாய்மொழியில் கற்பதன் மூலமாக மாணவர்கள் சிறப்பாக கற்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
‘தேசிய கல்விக் கொள்கையின் கீழ் உயர்கல்வியில் மாற்றத்தக்க சீர்திருத்தங்கள்' குறித்து காணொலி வாயிலாக நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதில் அவர் பேசியதாவது;புதிய கல்விக்கொள்கையை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
எனவே புதிய கல்விக்கொள்கையை நிறைவேற்றும் முடிவை அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும். இதன்படி, பாதியில் படிப்பை நிறுத்தியவர்கள், இந்த புதிய கல்விக் கொள்கையால் படிப்பைத் தொடரலாம். இதுவரை இருந்த கல்விமுறை என்ன சிந்திக்க வேண்டும் என்பதாக இருந்தது. புதிய கல்விக்கொள்கை எப்படி சிந்திக்க வேண்டும்' என்பதை வலியுறுத்துகிறது.இன்று நாம் இருக்கும் உலகத்தில், ஒரு தகவலை எளிதாக பெற முடியும். மாணவர்களின் பாடச் சுமையை குறைக்க வேண்டும்.
கலந்துரையாடல், செய்முறை அடிப்படையில் மாணவர்கள் கல்வியைப் பெற வேண்டும். நம் மாணவர்கள் உலகத் தரமிக்க கல்வியைப் பெறுவதே இதன் நோக்கம். அதன்படி, காலத்திற்கேற்ப உருவாக்கப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கையால் உலகத்தில் நம் மாணவர்களின் தரம் உயரும். எனவே, தற்போது இந்தியா தனது கல்வி முறையை மாற்ற வேண்டியது அவசியமாகிறது.
அதேநேரத்தில் தாய்மொழியில் கற்பதன் மூலமாக மாணவர்கள் சிறப்பாக கற்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. கடந்த சில ஆண்டுகளில் நம் கல்வி முறையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. மாணவர்களின் ஆர்வம், கற்பனைக்கு பதிலாக ஒரு மந்த மனநிலையை மாணவர்களிடத்தில் உருவாக்குகிறது.
கல்வியில் ஆர்வம் இல்லை என்றால் இளைஞர்கள் எப்படி புதுமையான திறனை வளர்க்க முடியும்?ஒவ்வொரு நாடும் அதன் கல்வி முறையில் தொடர்ந்து சீர்திருத்தங்களை ஏற்படுத்தி வருகிறது.
எனவே, நாமும் தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினரின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசியுள்ளார்.
No comments:
Post a Comment
ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. இதற்கு “FLASH NEWS KALVI” எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ “FLASH NEWS KALVI” குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் “FLASH NEWS KALVI” குழுவால் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.